Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வணிகர் ஒருவர் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வணிகர் ஒருவர் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்

டிச. 27-

முகநூல் விளம்பரம் ஒன்றின் மூலம் அறிமுகமான பங்குச் சந்தை முதலீட்டு மோசடியில் சிக்கி, வணிகர் ஒருவர் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார் என Johor Bahru Selatan மாவட்டக் காவல் துறை தலைவர் Asisten Komisioner Raub Selamat தெரிவித்தார்.
அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண் தன்னை முதலீட்டு ஆலோசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை, பாதிக்கப்பட்டவர் மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 14 பரிவர்த்தனைகளில் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்தியுள்ளார். லாபத்தை திரும்ப எடுக்க வேண்டுமென்றால் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல் கேட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார் என Raub Selamat மேலும் சொன்னார்.

ஆரம்ப கட்ட விசாரணையில், மோசடியில் தொடர்புடைய மூன்று வங்கிக் கணக்குகளில் இரண்டு, ஏற்கனவே மோசடி புகார்களைக் கொண்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்