Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மாது மானபங்கம் அந்நிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மாது மானபங்கம் அந்நிய ஆடவர் கைது

Share:

அம்பாங், மார்ச் 2 -

பேரங்காடி மையத்தில் தன்னுடன் வேலை செய்து வரும் மாதுவை, மானபங்கம் செய்ததாக கூறப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் 32 வயது மாது ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த அந்நிய ஆடவர் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

வேலை முடிந்தப் பின்னர் அந்த பேரங்காடி மையத்தின் கிடங்கில் அந்த மாதுவின் எடையை நிறுத்துப் பார்ப்பதாக கூறி, அவரை பின்புறமாக கட்டியணைத்து, அல்லாக்காக தூக்கி, முத்தமிட்டதாக அந்த மாது தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார் என்று ஏ.சி.பி மொகமட் அசாம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

அன்றைய தினமே கைது செய்யப்பட்ட 27 வயதுடைய அந்த அந்நிய நாட்டவர், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

மாது மானபங்கம் அந்நிய ஆடவர் கைது | Thisaigal News