முற்போக்கான சம்பள கொள்கைக்கான தேவையை நிறைவு செய்வதற்கு போதுமான ஆதாரங்களை ஆவண வடிவில் சமர்ப்பிக்கும் முதலாளிமார்கள் அரசாங்கத்திடமிருந்து ரொக்க வெகுமதித் தொகையை பெறுவர் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து இந்த ரொக்கத் தொகை அனுகூலத்தை பெறுதற்கு முன்னதாக தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை முதலாளிகள் நிரூபிக்க வேண்டும் என்று ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டார்.
முற்போக்கான சம்பள முறைத் திட்டத்தில் முதலாளிமார்களுக்கு கண்மூடித்தனமாக ரொக்க வெகுமதியை அரசாங்கம் வழங்கிவிடாது என்பதையும் அவர் விளக்கினார்.
எந்தெந்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்கியுள்ளதோ அந்த நிறுவனங்கள் மட்டுமே ரொக்க வெகுமதித் தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


