கடந்த 2019 ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த 50 வயது நபரை, சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
முகமட் சைரில் முகமட் சின் என்ற அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்களை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி டத்தின் சுரிதா புடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இவ்வழக்கின் தன்மைகள் குறித்து கூடிய பட்ச அளவில் கவனம் செலுத்தப்பட்டு, ஆராயப்பட்டதில் அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதி சுரிதா புடின் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபர் நெகிரி செம்பிலான், ஜெலுபு, திதி என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








