தொடர்புத்துறை மற்றும் இலக்கவில் அமைச்சு, இரண்டு வெவ்வேறு அமைச்சுகளாக பிரிக்கப்பட்ட போதிலும் தாம் தலைமையேற்றுள்ள தொடர்புத்துறை அமைச்சின் கீழ் முக்கிய துறைகள் இருக்கும் என்று அதன் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
JKOM எனப்படும் சமூக தொடர்புத்துறை, தமது அமைச்சின் கட்டப்பாட்டில் கீழ் வைக்கப்படும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் பெரும் சர்ச்சையில் சிக்கிய சமூக தொடர்புத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமாட் ஆகுஸ், பதவி விலகிய போதிலும் அந்த இலாகாவிற்கு புதிய தலைமை இயக்குநராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்ப்படவில்லை ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.
தொடர்புத்துறையின் புதிய அமைச்சுக்கு தலைமையேற்ற முதல் நாளான இன்று, நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.
சமூக தொடர்புத்துறைக்கு அப்பாற்பட்ட நிலையில் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான SKMM, மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியமான FINAS ( பினாஸ் ),/ துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு, தகவல் கழகமான IPPTAR ( இப்தார் ), / தகவல் இலாகா மற்றும் MyCreative Ventures ஆகியவை ஃபஹ்மி ஃபட்சில் அமைச்சின் கீழ் செயல்படும் இலாகாக்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








