Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பள்ளி முதல்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பள்ளி முதல்வர் மீது குற்றச்சாட்டு

Share:

கற்றல் கற்பித்தலின் போது வகுப்புக்கு வர தவறிவிட்டதாக கூறி தனது ஆசிரியர் மீது வழக்குத் தொடுத்த முன்னாள் மாணவரிடம், சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் திரும்பச் பள்ளிக்கு வரும்படி கடிதம் எழுதுமாறு பள்ளி முதல்வர் வற்புறுத்தியதாக அம்மாணவர் இன்று கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

செக்கு ஜைனால் ஜெஜெ என்ற அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கோரி, மீண்டும் பள்ளிக்கு வந்து வகுப்பை வழிநடத்துமாறு ஓர் உறுதி மொழி கடிதத்தை எழுதுமாறு பள்ளி முதல்வர் உத்தரவிட்டதாக 23 வயதுடைய சித்தி நஃபிரா சிமான் கூறினார்.

அந்த ஆசிரியரை பள்ளியிலிருந்த நீக்கும்படி கடிதம் எழுதமாறு வற்புறுத்தியே பள்ளி முதல்வேரே, தற்போது அவரை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மன்னிப்பு கோரி, கடிதம் எழுத அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் உத்தரவிட்டதாக அந்த முன்னாள் மாணவி குறிப்பிட்டார்.

Related News