சிபு, அக்டோபர்.07-
தனது மகனைக் கவனிக்காமல் கைவிடுதல், மகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு அனுமதித்தல் முதலிய குற்றங்களுக்காக 32 வயது மாது ஒருவருக்கு சரவா, சிபு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தனது 12 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் புரிவதற்கு தனது காதலனுக்கு அனுமதி அளித்தது மூலம் ஒழுங்கீனச் செயலுக்கு அந்த மாது உடந்தையாக இருந்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை அந்த மாது ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இரு குற்றங்களுக்கு அவருக்கு முறையே 8 ஆண்டு மற்றும் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி முஷிர் பீட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








