ஷா ஆலாம், நவம்பர்.01-
டெலிவரி சேவைகள், குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க, அஞ்சல் மற்றும் கூரியர் சேவை நிறுவனங்கள் சுங்கத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில கூரியர் சேவைகளில், சட்டவிரோதப் பொருட்கள், குறிப்பாக பாம்பு போன்ற அபாயகரமான உயிரினங்கள் அனுப்பப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தடுக்கும் வகையில், அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளின் செயல்முறைகளைப் புரிந்து கொள்ள சில தகவல்களும், தரவுகளும் திரட்டப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசு சாரா அமைப்புகளும், அஞ்சல் சேவை நிறுவனங்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








