Oct 3, 2026
Thisaigal NewsYouTube

எம்பிராயெர் நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைய மலேசியா முயற்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எம்பிராயெர் நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைய மலேசியா முயற்சி

நாட்டின் தற்காப்புத் தொழில்துறை வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த தற்காப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான எம்பிராயெர்-உடன் வட்டார மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைவதற்கான ஒத்துழைப்பை மலேசியா ஆராய்ந்து வருகின்றது.

இது குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறுகையில், எம்பிராயெர் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ஃபிரேடெரிகோ லெமோஸ், நேற்று விஸ்மா பெர்தாஹானுக்கு மரியாதை நிமித்தமாக மேற்கொண்ட சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விமானங்கள் உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தீர்வுகளை வழங்குவதில் எம்பிராயெர் நிறுவனத்துக்கு நிபுணத்துவம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு மூலம் மலேசியாவில் உள்ள தற்காப்புத் தொழில்துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகளையும், எம்பிராயெர் நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் மலேசிய நிறுவனங்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் ஆராய வழி ஏற்பட்டுள்ளதாகவும் முஹமட் காலிட் தெரிவித்துள்ளார்.

இந்த சாத்தியமான ஒத்துழைப்பு, உள்ளூர் பாதுகாப்புத் தொழில்துறையின் திறன்களை வலுப்படுத்தும் தேசிய தற்காப்புத் தொழில்துறை கொள்கை நோக்கங்களுடன் இணைந்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →