ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை இழிவுப்படுத்தியதாக ஆடவர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இன்ரா மூலியா அமாட் என்ற அந்த நபர், பிறர் முகம் சுளிக்கும் அளவிற்கு, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி, முகநூலில் சுல்தானை அவமதிக்கும் கருத்தைப் பதிவிறக்கம் செய்ததாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி ப்ரிசில்லா ஹேமாமாலினி நடராஜா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் வெள்ளி அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை இன்ரா மூலியா மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


