Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தொலைபேசி மோசடியில் 2 இலட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை இழந்த ஆசிரியை
தற்போதைய செய்திகள்

தொலைபேசி மோசடியில் 2 இலட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை இழந்த ஆசிரியை

Share:

கடந்த ஆகஸ்ட் மாதம் தொலைபேசி மோசடியால் பாதிக்கப்பட்ட தஞ்சோங் மாலிமைச் சேர்ந்த 52 வயதான ஆசிரியை 2 இலட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை இழந்தார்.

பேரா மாநிலக் காவல்துறைத் தலைவர் முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி கூறுகையில், பாதிக்கப்பட்டவருக்கு ஆகஸ்ட் 30 அன்று மலாக்கா போஸ் லாஜு வில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்பவருக்கு வந்துள்ளப் பொட்டலத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பொட்டலம் தன்னுடையது இல்லை என்று மறுத்திருக்கிறார். எனவே, இவ்விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்குமாறு அந்த பெண் ஆசிரியைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் வேறு யாரோ அந்த ஆசிரியையின் தனிப்பட்டத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டதாக முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி கூறினார். அதற்காக, அழைப்பைச் செய்தவர்களே மலாக்கா மாநிலக் காவல்துறைக்கு இணைப்பை வழங்கி இருக்கின்றனர்.

அந்த அழைப்பின் மறுமுனையில் துவான் அம்மார் என்பவரும் டத்தோ சம்சுல் அன்வார் என்பவருக் பாதிக்கப்பட்ட ஆசிரியையிடம் பேசி இருக்கிறார்கள்.

மேலும் "ஓங் காய் சின்" என்ற குற்றவாளிக்கு எதிராக போலீசார் நடத்திய சோதனையின் விளைவாக அந்த ஆசிரியையின் பெயரில் ஒரு சிஐஎம்பி வங்கி ஏடிஎம் கார்டு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆசிரியையின் பெயரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, அந்த ஆசிரியைக்கு மேலும் ஓர் அழைப்பு வந்ததாகவும் விசாரணையை எளிதாக்கும் வகையில் ரிம49,000 தாபோங் ஹாஜி பணத்தை தொகையை ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் முஹமாட் யுஸ்ரி கூறினார்.
தொடர்ந்து, செப்டம்பர் 4 ஆம் தேதி, அன்று பாதிக்கப்பட்டவர் அமானா சஹாமில் ரிம27,300 டெபாசிட் செய்தார். பின்னர், பேங்க் இஸ்லாம் இல் தனிப்பட்ட முறையில் ஒரு இலட்சத்து ஐம்பதாயரம் வெள்ளி கடன் வாங்கியுள்ளார்.

அந்தத் தொகையை எமாற்றுப் பேர்வழிகளுக்கு அனுப்பியதோடு சட்ட ஆலோசனைக்காக வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும் எனக் கூறி 10 ஆயிரம் வெள்ளியையும் கேட்டு வாங்கியுள்ளனர்.

நேற்று. அக்டோபர் 30 ஆம் நாள் தஞ்சோங் மாலிம் பேங்க் இஸ்லாம்மில் தமது வங்கிக் கணக்கைச் சரி பார்க்கும்போது அதில் இருந்த 2 இலட்சத்து 36 ஐயம் வெள்ளி காணாமல் போய் இருந்ததாக அந்த ஆசிரியை தெரிவித்ததை முஹமாட் யுஸ்ரி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தாம் எமாற்றப்பட்டத்தை உணர்ந்த அந்த ஆசிரியை, உடனடியாகக் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் 420இன் படி விசாரிக்கப்படுவதாக முஹமாட் யுஸ்ரி அவர் மேலும் சொன்னார்.

Related News