சக நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த நான்கு ஆடவர்களை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. உயிரிழந்த நபரை , அந்த நான்கு மியன்மார் பிரஜைகள்தான் கொலை செய்தனர் என்பதை நிரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக உயர் நீதிமன்றம் நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
மியன்மார் பிரஜைகள் மத்தியில் கைகலப்பு நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் சண்டையை தடுக்க அவர்களை நோக்கி பாதுகாப்பு அதிகாரி ராஜன் என்பவர் ஒரு கம்பை விட்டு எறிந்ததாக அந்த சண்டை தொடர்பான காணெளியில் தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பாதுகாப்பு அதிகாரி ராஜனை விசாரணைக்கு அழைக்காதது, பெரும் கேள்வி குறியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக நீதிபதி முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார். இந்த கொலை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் புடு லாமா வில் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய செய்திகள்
சக நாட்டவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு மியன்மார் பிரஜைகள் விடுதலை
Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


