கோத்தா கினபாலு, செப்டம்பர்.18-
சபாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவது, புத்ராஜெயாவிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடைமுறைகளில் மேம்பாடுகளைக் கொண்டு வர இந்நடவடிக்கைகள் காரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹிட், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மேம்பாடுகள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான சபாவில், நிரந்தர நிவாரண மையங்கள் கட்டப்படும் என்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரான ஸாஹிட் உறுதியளித்துள்ளார்.








