Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவில் கந்த சஷ்டி விரதம் விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவில் கந்த சஷ்டி விரதம் விழா

மலாக்கா, நவ.5-


மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், பழைய நானிங் திருக்கோவிலான ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி, நாளை மறுநாள் நவம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை வரை கந்த சஷ்டி விரத விழா பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நாளை நவம்பர் 6 ஆம் தேதி புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு மேல் பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், கட அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு ஆலய நித்திய பூஜை, இரவு 7.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை, கந்த சஷ்டி பாராயணம், தீபாரதனை, விபூதி பிரசாதம், சிற்றுண்டி வழங்குதல் முதலிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

பூஜைகள் யாவும் ஆலய பிரதம குரு, ஜோதிடர், ஆஞ்சநேய உபாசகர் சிவஸ்ரீ கு. நவதாஸ சர்மா குருக்கள் தலைமையில் நடைபெறும். ஆசிர்வாதக்குரு சர்வசாதக சாரியார், பிள்ளையார்பட்டி பாடசாலை சிவஸ்ரீ இரா முருகன் சிவம் முன்னிலையில் நடைபெறும்.

இவ்வைபத்தில் பக்தமெய்யன்பர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து, நிகழ்வில் பங்கு கொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →