May 5, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான்: பிளஸ் நெடுஞ்சாலைகளில் தினமும் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என கணிப்பு
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான்: பிளஸ் நெடுஞ்சாலைகளில் தினமும் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என கணிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.06-

வரவிருக்கும் சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு, பிளஸ் (PLUS) மலேசியா பெர்ஹாட் நிறுவனம் கிழக்குக்கரை விரைவுச்சாலையான LPT2 உட்பட தனது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துப் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.

உச்சக்கட்ட காலங்களில் தினசரி வாகனங்களின் எண்ணிக்கை 22 லட்சம் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து மக்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் இந்த போக்குவரத்து பிப்ரவரி 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல், பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் கிள்ளான் பள்ளத்தாக்கிற்குத் திரும்பும் பயணம் பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மிக அதிகமாக இருக்கும் என பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News