Nov 5, 2025
Thisaigal NewsYouTube
காப்பீட்டுக் கோரிக்கை சிக்கல்களைத் தீர்க்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை!
தற்போதைய செய்திகள்

காப்பீட்டுக் கோரிக்கை சிக்கல்களைத் தீர்க்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

புற்றுநோயாளிகளுக்கான காப்பீட்டுக் கோரிக்கைகளில் ஏற்படும் கால தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகள் குறித்து, சுகாதார அமைச்சு, பேங்க் நெகாரா மற்றும் நிதி அமைச்சுடன் விவாதித்து வருகின்றது.

இது போன்ற தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளால் புற்று நோயாளிகள் மிகவும் பாதிப்படைகின்றனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ள சுகாதார அமைச்சு, இவ்விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

நோயாளிகளிடமிருந்தும், காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் வரும் புகார்கள், தீவிர நோய் சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

காப்பீட்டுக் கோரிக்கைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, இது போன்ற சிக்கல்களால் எந்த ஒரு மலேசியரும் பாதிக்காத வகையில் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

Related News