நாட்டில் அடுத்த ஐந்து மாதங்கள் வரையில் அரிசி விநியோகிப்பில் பற்றாக்குறை ஏற்படாது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் உணவுபாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு உத்தரவாதம் அளித்துள்ளார்.
தற்போது கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு தாங்க வல்லதாகும். எனவே குறுகிய காலத்தில் நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று முகமட் சாபு உறுதி கூறியுள்ளார்.








