Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை ஆய்வறிக்கைத் தயாராகிக் இருக்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை ஆய்வறிக்கைத் தயாராகிக் இருக்கிறது

கோத்தா பாரு, ஜூன்.22-

பொதுப்பணித் துறை, தற்போது கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை தொடர்பான முழு பராமரிப்பு நிலை மதிப்பீட்டு அறிக்கையைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது. பழுது பார்க்கப்பட வேண்டிய பகுதிகள், பொருத்தமான பழுதுபார்க்கும் முறைகள், தேவையான நிதி ஒதுக்கீடு பற்றிய தகவல்களை இந்த அறிக்கை வழங்கும் என்று பொதுப்பணித் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ரொஸ்லான் இஸ்மாயில் தெரிவித்தார்.

முழு ஒட்டு மொத்த கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையையும் ஒரே நேரத்தில் பழுது பார்ப்பது சாத்தியமில்லை. ஏனெனில் இதற்காக ஓராண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் செலவாகும். எனவே, தற்போதுள்ள 55 மில்லியன் ரிங்கிட் நிதியுடன் திட்டத்தைத் தொடங்கி, பின்னர் அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதியைப் பெறுவார்கள் என ரொஸ்லான் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை ஆய்வறிக்கைத் தயாராகிக் இருக்கிறது | Thisaigal News