Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச வணிகரிடமிருந்த ஸ்கூட்டர்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வங்காளதேச வணிகரிடமிருந்த ஸ்கூட்டர்கள் பறிமுதல்

Share:

ஜோர்ஜ் டவுன், மார்ச் 2 -

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் எந்தவொரு வர்த்தக லைசென்ஸின்றி, மின்னில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த வங்காளதேச ஆடவரின் வணிகத் தளத்தில் பினாங்கு மாநகர் மன்றம் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையில் அந்த அந்நிய நாட்டவரின் வர்த்தகத் தலத்திலிருந்து 25 மின்னியல் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரவு 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனையில் அந்த அந்நிய ஆடவரின் வர்த்தகத் தளம், எந்தவொரு லைசென்ஸின்றி ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளதாக பினாங்கு மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News