கோலாலம்பூர், நவம்பர்.05-
மூன்று நபர்கள் தண்டவாளப் பாதையில் அத்துமீறி நுழைந்து, கேபள் கம்பிகளை வெட்டுவதற்கு முயற்சி செய்த சம்பவத்தைத் தொடர்ந்து தடைப்பட்ட புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவை, இன்று மாலை 5.27 மணிக்கு வழக்க நிலைமைக்குத் திரும்பியது.
ஶ்ரீ டாமான்சாரா பாராட் மற்றும் ஶ்ரீ டாமான்சாரா சென்ட்ரல் ஆகிய நிலையங்களுக்கு இடையில் இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாக ரேபிட் ரெயில் நிறுவனம் தெரிவித்தது.
அந்த இடத்தில் கேபள் கம்பிகளைத் திருடும் முயற்சி நடந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு தண்டவாளப் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ரெபிட் ரெயில் நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








