May 22, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக் லாபுவானுக்கு டிக்கெட்டி விலை 599 வெள்ளி
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக் லாபுவானுக்கு டிக்கெட்டி விலை 599 வெள்ளி

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 24 -

இவ்வாண்டு ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பண்டிகை நாளிலிருந்து முதல் 3 தினங்களுக்கு சபா, சரவாக், லாபுவான் வழித்தடங்களுக்கு ஒரு வழிப்பயணத்திற்கு சிக்கன வகுப்பில், விமான டிக்கெட் கட்டணம் கூடிய பட்சம் 599 வெள்ளி என்று அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக போக்குவரத்து அ மைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும் ஹரிராயா பெருநாளின் போது, பண்டிகைக்கு அப்பால் விடுமுறையை கழிப்பதற்கும், தங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்புவதற்கும் மக்களுக்கு, சீரான விமானக்கட்டணத்தை உறுதி செய்யும் பொருட்டு மேற்கண்ட கட்டணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இதேபோன்று சீனப்புத்தாண்டு, காவை, காமாத்தான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் சீரான விமானக் கட்டண விதிப்பு கொண்டிருப்பதை அரசாங்கம் ஒரு கொள்கையாக கொண்டு இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News