May 21, 2026
Thisaigal NewsYouTube
சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்

Share:

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் அல்லது நியமனத்தின் பேரில் அமையக்கூடிய ஓர் அரசாங்கம் தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியை முழுமையாக பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கு நாடளுமன்றத்தில் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டார்.

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கிய ஒரு தவணைக் காலத்தில் மூன்று வெவ்வேறு அரசாங்கங்கள் மாறிய சூழல், இனியும் நாட்டில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இத்தகைய சட்ட மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது அவசியமாகும் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இன்று பரிந்துரை செய்துள்ளார்.

அடிக்கடி அரசாங்கம் மாற்றப்படுவதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்க சட்ட ரீதியாக இப்படியொரு சட்டம் நடைமுறையில் இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படக்கூடிய ஒரு அரசாங்கம் தனது ஐந்து ஆண்டு தவணைக் காலத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News