வேப் எனப்படும் புதிய ரக புகை இழுக்கும் பழக்கத்திற்கு 300 முதல் 400 சிறுவர்கள் அடிமையாகி உள்ளனர் என பினாங்கு பயனிட்டாளர் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. 9 வயது முதல் 12 வயது சிறுவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதோடு பெண்குழந்தைகளும் இதற்கு அடிமையாகி இருப்பதாக பினாக்கு பயனிட்டாளர், கல்வி பிரிவின் அதிகாரியும் சமூக சேவையாளருமான என்.வி. சுப்பராவ் தெரிவித்துள்ளார்.
வீட்டில் பெற்றோர்கள் வேப் பிடிக்கும் பழக்கத்தினால் தாங்கள் ஈர்க்கப்படுவதுடன் அதனை விளையாட்டாக முதல் முறையாக பயன்படுத்தி பழகிய பிறகு அதற்கு சிறுவர்கள் அடிமையாகி விடுவதாக ஆய்வின் வழி அவர் குறிப்பிட்டார்.
வேப் பழக்கத்திற்கு அடிமையாகி குழந்தைகளுக்குப் புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை என்றும் வேப் கருவிக்கு பயன்படுத்தப்படும் பலவகையான சுவையூட்டிகள் குழந்தைகளை ஈர்த்துள்ளது என சுப்பராவ் தெரிவித்துள்ளார்.
வாரத்தில் இரண்டு முறையாவது வேப் புகையைப் பெற்றோர்களுக்கு தெரியாமல் தாங்கள் இழுத்து விடுவதாக சிறுவர்கள் கூறியுள்ள கூற்றை சுப்பராவ் பகிர்ந்துள்ளார்.








