May 3, 2026
Thisaigal NewsYouTube
கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட Nurfisya Zulkifly-வின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட Nurfisya Zulkifly-வின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

Share:

கோத்தா பாரு, மே.02-

கோத்தா பாரு, கெத்தேரே பகுதியில் உள்ள கம்போங் சிமா அருகேயுள்ள நெல் வயல் பகுதியில், நேற்று 61 குத்துக்காயங்களுடன் கொலை செய்யப்பட்ட கிடந்த 19 வயது கல்லூரி மாணவியின் குடும்பத்தினர், தாங்கள் மிகுந்த துயரத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அம்மாணவியின் வீட்டிற்கு செய்தியாளர்கள் சென்ற போது, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அங்கிருந்த நிலையில், அவர்கள் ஊடகங்களைச் சந்திக்க மறுத்துள்ளனர்.

தாங்கள் மிகவும் சோகத்துடன் இருப்பதால், தற்போது ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க இயலாது என்று அப்பெண்ணின் உறவினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Nurfisya Zulkifly என்ற அம்மாணவியின் உடல் நேற்று இரவு கோத்தா பாருவிலுள்ள Raja Perempuan Zainab II மருத்துவமனையின் தடயவியல் பிரிவில், உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், இன்று அதிகாலை 5.30 மணிக்கு, Kampung Periang Muslim கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 4 பேரைக் கைது செய்துள்ள போலீசார் அவர்களை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

Related News