Jul 31, 2026
Thisaigal NewsYouTube
டீசலுக்கான உதவிநிதி சனவரி 1 க்குப் பிறகும் தொடரும்
தற்போதைய செய்திகள்

டீசலுக்கான உதவிநிதி சனவரி 1 க்குப் பிறகும் தொடரும்

Share:

எதிர்வரும் சனவரி 1 முதல் டீசலுக்கான உதவித் தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும் எனப் பரவி வரும் செய்தியை மறுத்துள்ளது உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு.

ஃப்ளீட் கார்டு, மைசுப்சிடி டீசல் ஆகிய புதிய திட்டத்தை அவ்வனைச்சு சனவரி 14 ஆம் தேதி வரை செயல்பாட்டில் உள்ளது. இதில் ஆறு நிறுவனங்களை உள்ளடக்கியதோடு, ஸ்கிட் டேன்குகளில் டீசல் ஒதுக்கீட்டைப் பெறுகின்றன. ஆனால் இத்திட்டத்தில் தனியார் டீசல் வாகனங்கள் உட்படுத்தப்பட வில்லை எனவும் அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டம் ஒரு முன் முயற்சி என்பதால், அதன் பயனாற்றல் குறித்து சோதனை செய்யப்படும்.

எனவே, மக்களைக் குழப்பும் எந்தத் தகவலையும் யாரும் பரப்ப வேண்டாம் என அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News