Jun 28, 2026
Thisaigal NewsYouTube
2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6.3% முதல் 6.5% வரை இருக்கலாம்: பொருளாதார நிபுணர் கணிப்பு
தற்போதைய செய்திகள்

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6.3% முதல் 6.5% வரை இருக்கலாம்: பொருளாதார நிபுணர் கணிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

மலேசியாவின் ஊழியர் சேமநிதி வாரியமான ஈபிஎஃப், 2025-ஆம் ஆண்டிற்கான தனது லாப ஈவு விகிதத்தை 6.3 விழுக்காடு முதல் 6.5 விழுக்காடு வரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மலேசியாவின் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக, ஈபிஎஃப் இந்த ஆண்டு சிறந்த வருவாயை ஈட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த 6.3 விழுக்காடு முதல் 6.5 விழுக்காடு லாப ஈவு என்பது சந்தாதாரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது.

ஈபிஎஃப் மேற்கொண்டு வரும் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து கிடைக்கும் லாபம், இந்த உயர்வான லாப ஈவு விகிதத்திற்கு முக்கியக் காரணமாக அமையும் என பேங்க் முவாமாலாட் பெர்ஹாட்டின் பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News