ஜோகூர் பாரு, அக்டோபர்.25-
மாணவர்கள் மத்தியில் கட்டெழுங்கை மலரச் செய்வதற்கு பள்ளிகளில் பிரம்படித் தண்டனை முறையை மறுப்படியும் கொண்டு வரும் உத்தேசத் திட்டத்திற்கு ஜோகூர் மாநிலம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
எனினும் கல்வி அமைச்சின் சரியான வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டு இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் தெரிவித்தார்.
தற்போது பள்ளிகளில் அதிகரித்து வரும் குற்றச்செயல் சம்பவங்களைத் தடுப்பதற்குத் தனிப்பட்ட முறையின்றி பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சியுடன் வியூகங்களை வகுப்பதற்கு ஜோகூர் மாநிலம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








