கோலாலம்பூர், செப்டம்பர்.22-
லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து மூவார் எம்.பி. சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மானை விடுதலை செய்து இருக்கும் புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு இன்று மேல்முறையீடு செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடா கட்சியின் முன்னாள் தலைவரான சையிட் சாடிக்கை விடுதலை செய்து இருப்பது மூலம் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் தவறு இழைத்துள்ளனர் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் வான் லாடின் தெரிவித்தார்.
அஹ்மாட் ஸைடி இப்ராஹிம் தலைமையிலான மூவர் அடங்கிய அப்பீல் நீதிமன்ற குழுவினர், சையிட் சாடிக்கிற்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை, 2 பிரம்படித் தண்டனை மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை ரத்து செய்து இருப்பது மூலம் சட்ட அம்சங்களில் அவர்கள் தவறு இழைத்துள்ளனர் என்று வான் ஷாஹாருடின் குறிப்பிட்டார்.








