Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

Share:

கோலாலம்பூர், மே.18-

மலேசியாவில் Hari Raya Aidiladha பண்டிகையானது வரும் மே 27-ஆம் தேதி, புதன்கிழமை கொண்டாடப்படும் என நேற்று இரவு நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Zulhijjah 1447 Hijri-யானது இன்று மே 18-ஆம் தேதி, தொடங்குவதாக, அம்மாநாட்டின் இடைக்கால உதவி செயலாளர் எஃப்பெண்டி ஜலாலுடின், தேசிய ஒளிபரப்புச் சேவை நிறுவனமான ஆர்டிஎம் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மலேசியாவில் ஹரி ராயா ஹஜி என்றழைக்கப்படும் Aidiladha பண்டிகையானது, பொதுவாக தொழுகை, ஈகை மற்றும் கால்நடைகள் பலியிடும் வழிபாட்டு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகின்றது.

அண்டை நாடுகளான இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் முஸ்லிம்கள் Hari Raya Aidiladha பண்டிகையை வரும் மே 27 -ஆம் தேதி கொண்டாடவுள்ளனர்.

அதே வேளையில், தாய்லாந்தில் வாழும் முஸ்லிம்கள் இந்த பண்டிகையை ஒரு நாள் தாமதமாக, அதாவது மே 28-ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News