கோம்பாக், மே,18-
ரவாங்-பத்து ஆராங் சாலையில் நேற்று கூட்டத்தினரிடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அச்சம்பவத்தின் வீடியோ ஒன்று நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் தலைமையகம் இன்று புகார் பதிவு செய்ததாகவும் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் நசீர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவமானது ரவாங்-பத்து ஆராங் சாலையில், ரவாங் டோல் பிளாசாவுக்குச் செல்லும் வழியில், வடக்கு–தெற்கு விரைவுச் சாலைக்குச் செல்லும் இணைப்பிற்கு முன்பாக நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது பொது இடத்தில் கலவரம் ஏற்படுத்தியதாக விசாரணை செய்யப்படுகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.








