Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய பிஎம்கேஎஸ் நிறுவனங்களுக்கு உலகளாவிய வாய்ப்பு: பிரதமரின் ஜப்பான் பயணத்தில் அமைச்சர் ஸ்டீவன் சிம் பங்கேற்பு
தற்போதைய செய்திகள்

மலேசிய பிஎம்கேஎஸ் நிறுவனங்களுக்கு உலகளாவிய வாய்ப்பு: பிரதமரின் ஜப்பான் பயணத்தில் அமைச்சர் ஸ்டீவன் சிம் பங்கேற்பு

Share:

மலேசியக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் புதிய உலகளாவிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஜப்பான் பயணத்தில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் இணைந்துள்ளார்.

இன்று முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறும் இப்பயணத்தின் போது, இரு நாட்டுத் தொழில்முனைவோரையும் இணைக்கும் 'பேங்க் ராக்யாட் பிஸ்மேட்ச்' வணிகக் கூட்டம் மற்றும் மதிப்புமிக்க 'நிக்கேய் ஆசிய எதிர்கால மன்றம் 2026' ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மலேசியாவின் ஒட்டுமொத்த வணிகத்தில் 96.1 விழுக்காடாக விளங்கும் உள்நாட்டு நிறுவனங்களைச் சர்வதேச அளவில் சிறந்த ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதே இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் முக்கிய இலக்காகும் என தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளத.

Related News