உற்பத்தி, சேவைத் துறைகளுக்கான பொருளாதார வளர்ச்சி சிலாங்கூரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மெதுவாகவே இருக்கின்றது என சிலாங்கூர் மாநில முதலிடு, வர்த்தக ஆட்சிக்குழு உறுப்பினர் இன் சி ஹான் தெரிவித்தார்.
இந்தச் சில்லகளைத் தவிர்க்க முடியாது எனக் கூறிய அவர், நிச்சயம் அடுத்த ஆண்டு வழக்கு நிலைக்குத் திரும்பி முன்னேற்றப் பாதையில் செல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்தாக, சிலாங்கூரில் உற்பத்தி, சேவைகள் ஆகிய இரண்டு முக்கிய துறைகள் மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும் போது, உயர் வருமானம் கொண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாநில அரசின் திட்டங்களைப் பற்றி சி ஹான் இடம் ஹுலு கிலாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ முஹமாட் அஸ்மின் அலி விளக்கம் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த சி ஹான் அவ்வாறு விளக்கமளித்தார்.








