Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலி காலமானார்
தற்போதைய செய்திகள்

மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலி காலமானார்

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலி இன்று தனது 100ஆவது வயதில் காலமானார்.

காலை சுமார் 9.20 மணியளவில் தேசிய இருதயக் கழகத்தில் அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

மகாதீர் பிரதமராக இருந்த காலக்கட்டங்களில், மருத்துவரான சித்தி ஹஸ்மா, பிரதமரின் மனைவி எனத் தமக்குக் கிடைத்த தளத்தை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி பல்வேறு முக்கிய விவகாரங்களில் தீவிரமாகக் குரல் கொடுத்தவர் ஆவார்.

குறிப்பாக, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, கல்வியறிவு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.

100 ஆண்டுகள் வாழ்ந்த சித்தி ஹஸ்மா, மருத்துவத் துறையிலும் சமூக நலச் செயல்பாடுகளிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் ஆவர்.

Related News