Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஆபாசமாக நடந்துக் கொண்ட முதியவருக்கு 18 நாள் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆபாசமாக நடந்துக் கொண்ட முதியவருக்கு 18 நாள் சிறை

பாரிட் புந்தார், மார்ச்.12-

18 வயது பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு பேரா, பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 18 நாள் சிறைத் தண்டனை விதித்தது.

72 வயது ஸைனால் அபிடின் சப்ரி என்ற அந்த முதியவரின் இச்செயலை மாஜிஸ்திரேட் முகமட் ஷைபுஃல் அக்மால் முகமட் ராஸி கடுமையாகக் கண்டித்தார்.

ஓர் இளம் பெண்ணிடம் இவ்வாறு அருவருக்கத்தக்க நிலையில் நடந்து கொண்டது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று அந்த முதியவரை நோக்கி, மாஜிஸ்திரேட் கடிந்து கொண்டார்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த முதியவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி பாரிட் புந்தாரில் உள்ள குளிர்பதனப் பெட்டிக் கடையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்குற்றத்திற்கு இனி அபராதம் இல்லை. சிறைத்தண்டனையே பொருத்தமானதாகும். நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு முதல் நாள்தான், சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறி, அந்த முதியவருக்கு, மாஜிஸ்திரேட் முகமட் ஷைபுஃல், 18 நாள் சிறைத் தண்டனையை விதித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்