வாகனமோட்டி ஒருவர், இரண்டு வாகனங்களை மோதித் தள்ளியப்பின்னர் பொது மக்கள் துரத்தியும் நிற்காமல் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றதற்கு அந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டது, போலி எண் பதிவு பட்டையாகும் என்று நம்பப்படுகிறது.
பொது மக்களிடம் சிக்கினால் தாங்கள் துவம்சம் செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக அக்காரோட்டி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.05 மணியளவில் கோலாலம்பூர் தாமான் ஶ்ரீ கோம்பாக் க்கும் ஜாலான் கோம்பாக்கிற்கும் இடையில் செந்தூல் பகுதியில் நிகழ்ந்துள்ளது என்பது விசாணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட காரோட்டி தப்பிச் செல்லும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


