Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஆயிரம் அரசாங்கம் ஊழியர்கள் தொண்டூழியர்களாக களம் இறங்குவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆயிரம் அரசாங்கம் ஊழியர்கள் தொண்டூழியர்களாக களம் இறங்குவர்

டிச. 7-

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இதுவரை ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் தொண்டூழியர்களாக களம் இறங்கிருப்பத்தாக அரசாங்க தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar தெரிவித்துள்ளார்.

இன்று கெடா, கூலிம் நகராண்மை கழகத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி , வெள்ளப்பேரிடரை எதிர்கொள்ள SKUAD IHSAN MADANI திட்டத்தின் கீழ் அரசுப்பணியாளர்கள் தொண்டூழியர்களாக களம் இறங்கி இருப்பதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக, அரசாங்க பொது பல்கலைக்கழகத்தில் 500 ஊழியர்கள் , நிதி அமைச்சியிலிருந்து 60 ஊழியர்கள் மற்றும் கல்வி அமைச்சு உட்பட இன்னும் சில அமைச்சுகளிலிருந்து அரசாங்க ஊழியர்கள், வெள்ளப் பாதிப்புக்கு இலக்காகியுள்ள மாவட்டங்களில் தொண்டூழியர்களாக களம் இறங்கி மக்களுக்கு உதவி வருகின்றனர் என்று டான் ஷம்சுல் குறிப்பிட்டார்.

வெள்ளத்தினால் பாதிப்பட்ட கிளாந்தானிலுள்ள 6 மாவட்டங்கள் , கெடாவில் 2 மாவட்டங்கள் இன்னும் சில மாநிலங்களில் Skuad Ihsan Madani திட்டத்தின் வாயிலாக உதவிகள் நல்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,380 ஆயிரம் பேராகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, கூலிம் நகராண்மை கழகத்தை பார்வையிட்ட டான்ஸ்ரீ ஷம்சுல், பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டதுடன் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கூலிம் நகராண்மை கழகத்தின் தலைமை அதிகாரி டத்தோ ஹஜி எல்மி யூசோப் மற்றும் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி & படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →