ஷா ஆலாம், அக்டோபர்.16-
சிலாங்கூர், புக்கிட் கெமுனிங்கில் அமைந்திருக்கும் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இரவு உணவு மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் இந்த நிகழ்வு மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் மட்டுமின்றி புக்கிட் கெமுனிங் சுற்றுப் பகுதியில் உள்ள முதியவர்களும் இவ்விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், தமது கையாலேயே உணவு பரிமாறியதுடன் அன்பளிப்புகளையும் எடுத்து வழங்கினார்.

புக்கிட் கெமுனிங் இந்திய கிராமத்துத் தலைவர் நடராஜா, ஷா ஆலாம் மாநகர மன்ற உறுப்பினர் ச. யோகேஸ்வரி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








