Oct 1, 2026
Thisaigal NewsYouTube

யுஇசி விவகாரத்தை அரசியல் சர்ச்சையாக்க வேண்டியதில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யுஇசி விவகாரத்தை அரசியல் சர்ச்சையாக்க வேண்டியதில்லை

ஷா ஆலாம், டிசம்பர்.13-

யுஇசி எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வுச் சான்றிதழ் முறையை ஓர் அரசியல் விவகாரமாக சர்ச்சையாக்க வேண்டியதில்லை என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கேட்டுக் கொண்டார்.

சீன மாணவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் இன்னமும் தேசிய கல்வி முறையில் கீழ் பயின்று வருகின்றனர். மிகக் குறைந்த சீன மாணவர்கள் மட்டுமே மெண்டரின் மொழியில் கூடுதல் கல்வி முறையைக் கொண்ட தனியார் சீன இடைநிலைப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

கிட்டத்தட்ட 4 லட்சம் சீன மாணவர்களில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே யுஇசி கல்வி முறையைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மலாய் மொழியை மாண்புறச் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தற்காக்க வேண்டியுள்ளது. இதனை ஓர் அரசியல் சர்ச்சையாகப் பார்க்க வேண்டியதில்லை என்று முன்னாள் பொருளாதார அமைச்சரான ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →