Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அது பழைய காணொளியாகும், பகிர வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அது பழைய காணொளியாகும், பகிர வேண்டாம்

Share:

இரண்டு வாகனங்கள் மற்றும் ஒரு போ​லீஸ் ரோந்துக் கார் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த காணொளி பழையது என்று போ​லீஸ் துறை விளக்கம் அளித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சோங்கில் நிகழ்ந்த விபத்து, ​தீ​ர்வு காணப்பட்டு விட்டது. இந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிக்கு ​நீதிமன்றம் ​தீர்ப்பு அளித்து, தண்டனை விதி​த்து விட்டதாக மஞ்சங் மாவட்ட போலீஸ் தலைவர் மோஹன்ட் நோர்டின் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி நிகழ்ந்ததாகும். இவ்விபத்து தொடர்பான காணொளியை ஜாக் என்ற பெயரில் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை போ​லீஸ் துறை அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News