Oct 9, 2026
Thisaigal NewsYouTube

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவம்: அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவம்: அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்படும்

ஷா ஆலாம், ஜூன்,28-

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதியில் எரிவாயு குழாய் வெடிப்புத் தீச் சம்பவம் தொடர்பில் அதன் விசாரணை மீதான தொழில்நுட்ப அறிக்கை வரும் திங்கட்கிழமை பொதுவில் வெளியிடப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக அந்த அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எழுத்துப்பூர்வமான அந்த அறிக்கை, தயாரிக்கப்பட்டு விட்டது. நேற்று அவால் முஹாராம் பொது விடுமுறை என்பதால் குறுகிய காலக் கட்டத்தில் அதனை அறிவிக்க இயலவில்லை என்று அவர் விளக்கினார்.

இது கவனக்குறைவால் நடந்த சம்பவமா? அல்லது கீழறுப்பு நடவடிக்கையா? என்பது குறித்து உண்மை விவரத்தை இந்த அறிக்கை அம்பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →