பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.14-
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த மெக்னம் குலுக்கலில் சிலாங்கூரைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு மெக்னம் 4D ஜேக்பாட் குலுக்கலில் பரிசாக 13.26 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
காதலியின் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பிய காதலன், காதலிக்கு blind-box பொம்மையைப் பரிசாகத் தந்தார். அந்தப் பெட்டியில் பல விதமான பொம்மைகள் அடைத்து வைத்திருப்பார்கள். நமது விருப்பத்திற்கேற்ப ஒரு பெட்டியைத் தேர்வு செய்து வாங்கலாம்.
அப்படி வாங்கிய அந்த அட்டைப் பெட்டியில் தன் காதலிக்குப் பிடித்த பொம்மை கிடைத்ததில் அந்த நபர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். காதலியின் பிறந்த தேதி, அந்தப் பெட்டியில் அச்சடிக்கப்பட்டு இருந்த எண்களை மெக்னம் 4D ஜேக்பாட்டில் System Play 05 இல் பந்தயம் கட்டியிருக்கிறார்.
அவர் பந்தயம் கட்டிய எண்களில் 2 Four D எண்களான 9523 – 5763 ஆகிய எண்கள் ஜேக்பாட் குலுக்களில் பரிசுத் தொகையை வென்றது.








