கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற கெடா மாநில சட்டமன்றத் தேர்தலின் போது வாக்களிப்புப் பெட்டியில் செலுத்துவதற்கு முன்பு அடையாளமிடப்பட்டுள்ள தமது வாக்குச்சீட்டை பொதுவில் பகிரங்கமாக காட்டியதாக கூறப்படும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர், விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சனூசிக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் மீறல் சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ரஸாருதீன் குறிப்பிட்டார். இந்த விசாரணை எல்லா நிலைகளிலும் நியாயமான முறையில் நடைபெறும் என்று ஐஜிபி உறுதி அளித்துள்ளார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


