Jul 31, 2026
Thisaigal NewsYouTube
115 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல், போலீஸ் அதிரடி
தற்போதைய செய்திகள்

115 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல், போலீஸ் அதிரடி

Share:

ஜொகூர், ஆகஸ்ட் 25-

ஜோகூர், ஜாலான் ஸ்குடாய் - பாண்டாய் லிடோ சாலையில் போலீசார் மேற்கொண்ட சாம்செங் ஜாலனன் எனும் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் சாலை கேடிகளின் பல்வேறு குற்றங்களுக்காக அவர்களின் 115 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி, இன்று திங்கட்கிழமை அதிகாலை வரையில் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையில் 257 மோட்டார் சைக்கிளோட்டிகளும், 286 தனிநபர்களும் சோதனை செய்யப்பட்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் தெரிவித்தார்.

சாலைபோக்குவரத்து இலாகாவான JPJ, சுற்றுச்சூழல் இலாகா மற்றும் ஜோகூர்பாரு மாநகர் மன்றம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News