Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் எழுவர் காயமுற்றனர்: கூலாயில் சம்பவம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் எழுவர் காயமுற்றனர்: கூலாயில் சம்பவம்

கூலாய், டிச.9-


ஜோகூர், கூலாய், ஜாலான் சீலோங், உலு தெப்ரா சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் எழுவர் காயமுற்றனர். புரோட்டோன் வாஜா – புரோட்டோன் பெர்சோனா சம்பந்தப்பட்ட இந்த விபத்து, கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக கூலாய்i மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. டான் செங் லீ தெரிவித்தார்.

அனுமதிக்கப்படாத சாலை இரட்டைக்கோட்டில், வாகனத்தை முந்திச் செல்வதற்கு முற்பட்ட புரோட்டோன் வாஜா கார், எதிரே வந்த புரோட்டோன் பெர்சோனா காருடன் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டான் செங் லீ குறிப்பிட்டார்.

இதில் புரோட்டோன் வாஜா காரில் இருந்த நால்வரும், புரோட்டோன் பெர்சோனா காரில் இருந்த மூவரும் காயமுற்றதாக டான் செங் லீ தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →