Sep 27, 2026
Thisaigal NewsYouTube
எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்
தற்போதைய செய்திகள்

எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்

Share:

டாமன்சாரா–பூச்சோங் நெடுஞ்சாலையான LDP- பில் நேற்று காலை 8.43 மணியளவில் ஆறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் பலத்த காயமடைந்தார்.

முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதால் ஏற்பட்ட இந்த விபத்தில், காயமடைந்தவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுதின் மமாட் கூறுகையில், போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 43-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

Related News