கல்வி அமைச்சராக இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ள ஃபட்லினா சிடெக், ஆசிரியர்கள் மாணவர்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் தைரியமாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி ஆய்வாளரான ஒத்மான் தலிப் கேட்டுக் கொண்டார்.
கல்வி ரீதியாக வளர்ந்து வரும் பிரச்னைகளை குறித்து கல்வி அமைச்சர் சரியான நேரத்தில் கருத்து, விளக்கங்களை வழங்க வேண்டும்.
எழுகின்ற பிரச்னைகளை அதிக கவனத்துடன் கையாளவில்லை என்றால் அப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்காது. தற்போது எழுகின்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க ஃபட்லினா சிடெக் முன்வருவது கட்சியின் அடிப்படையில் காணப்படுகிறது.
கல்வி அமைச்சராக இருக்கையில் தொழில் ரீதியாகவும் கட்சி சார்பற்ற நிலையிலும் நடந்து கொள்ள வேண்டும். கடந்த மாதம் குறிப்பிட்ட பள்ளிகளில் பாலஸ்தீன ஒற்றுமை வாரத்தை நிர்வகிப்பதை குறித்து எதிர்கொண்ட விமர்சனங்களினால் ஃபட்லினா சிடெக் நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டார்.
அதன் பின் ஆயெர் ஹித்தாம் எம்பி வீ கா சியோங், சீனப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பிய பொழுது உணர்ச்சிகரமாக பதில் தெரிவித்தது ஃபட்லினா சிடெக் மீண்டும் சவால்களை தைரியமாக கையாள்வதற்கு பயிற்சி தேவை என்று ஒத்மான் தலிப் தெரிவித்தார்.








