மலேசிய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஃபைனாஸ் இன் தலைமைச் செயல்முறை அதிகாரியாக டத்தோ அஸ்மிர் சைஃபுடின் முதாலிப் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை நவம்பர் 1ஆம் தேதி முதல் எதிவரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரையில்டத்தோ அஸ்மிர் சைஃபுடின் முதாலிப் அப்பதவியை வகிப்பார் என ஃபைனாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுனைட்டட் கிங்டம்மில் உள்ள ஷிஃபீல்ட் ஹல்லாம் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் பட்டம் பெற்ற அவர், மலேசியா டிஜிட்டல் எகோனோமி கோர்பொரேஷன் எம்டிஇசி இல் புத்தாக்க பல்லூடகப் பிரிவில் தமது பணியைத் தொடங்கினார்.
மல்டிமீடியா கிரியேட்டிவ் பிரிவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் பேஸ் FX இல் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். பேஸ் FX இல் நிர்வாக இயக்குநராகவும் அவர் பணி புரிந்துள்ளார்.
படைப்பாற்றல் துறையில் அவரது விரிவான நிபுணத்துவமும் அனுபவமும் கொண்ட டத்தோ அஸ்மிர் சைஃபுடின் மலேசியத் திரைப்படத் துறையை உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்வார் என ஃபைனாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.








