Jun 12, 2026
Thisaigal NewsYouTube
தடம் புரண்ட 4 எல்ஆர்டி பெட்டிகள் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டன
தற்போதைய செய்திகள்

தடம் புரண்ட 4 எல்ஆர்டி பெட்டிகள் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டன

Share:

கோலாலம்பூர், சான் சோ லின் எல்ஆர்டி நிலையம் அருகே அண்மையில் தடம் புரண்ட நான்கு ரயில் பெட்டிகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக டெப்போவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி, பாதுகாப்பாக நகர்த்துவதற்கான மீட்புப் பணிகள் நேற்றும் இன்று அதிகாலையும் தீவிரமாக நடைபெற்றதாக ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று தண்டவாள சுவிட்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தட ரயில் தடம் புரண்டது.

பாதிக்கப்பட்ட தண்டவாளம் வரும் புதன்கிழமைக்குள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். அதுவரை அனைத்து நிலையங்களும் தற்காலிக மாற்று கால அட்டவணையின் கீழ் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News