பி.எம்.டபிள்யூ கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் ஒருவர், காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட வேளையில் மற்ற இருவர் காலிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். இச்சம்பவம் இன்று காலை 5 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் காஜாங் டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது.
காரின் இடிபாடுகளுக்கு இடையில் இரண்டு கால்களும் ம் சிக்கிக்கொண்டு பெரும் அவதிக்குள்ளான அந்த ஓட்டுநரை மீட்பதற்கு தீயணைப்பு, வீட்புப்டையினர் வரைவழைக்கப்ப்டடனர். பிரத்தியேகமான சாதனங்களை பயன்படுத்தி, இடிபாட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட அந்த ஓட்டுநர், சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.








