Oct 5, 2026
Thisaigal NewsYouTube

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை புகார் செய்ய எளிய வழி தேவை – சுஹாகாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை புகார் செய்ய எளிய வழி தேவை – சுஹாகாம்

பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சுகாதாரப் பரிசோதனைகளை மட்டும் நம்பாமல், சிறார்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பட்சத்தில், அது குறித்து பாதுகாப்பாக புகார் அளிக்க நம்பகமான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சுஹாகாமின் சிறார்கள் ஆணையர் அடிப் சமூரி கூறுகையில், ஒவ்வொரு பள்ளியிலும் அது போண்ற மாணவர்களை அடையாளம் கண்டு, நம்பிக்கையுடன் அணுகக்கூடிய வகையில் பயிற்சி பெற்ற அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிக்கு வெளியேயும் சுயாதீனமான புகார் அளிக்கும் வழிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரணம், சில சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் ஆசிரியராகவோ, பள்ளி ஊழியராகவோ அல்லது பள்ளியுடன் தொடர்புடையவராகவோ இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், சிறார்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தங்களது புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பும்போதுதான் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாகப் பேசுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, ஆண்டுக்கு ஒருமுறை சுகாதாரப் பரிசோதனைக்காக காத்திருப்பதை விட, ஒவ்வொரு நாளும் அந்த நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என அடிப் சமூரி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாணவி ஐரின் சோஃபியா கொலை செய்யப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை: கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தகவல்

மாணவி ஐரின் சோஃபியா கொலை செய்யப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை: கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தகவல்

போலி ஜப்பானிய காரை பயன்படுத்திய இருவர் - பல கிலோமீட்டர் துரத்திப் பிடித்த போலீசார்

போலி ஜப்பானிய காரை பயன்படுத்திய இருவர் - பல கிலோமீட்டர் துரத்திப் பிடித்த போலீசார்

தாய்லாந்து செல்லும் மலேசியர்கள்: மூன்றாம் தரப்பு காப்பீடு பெற அறிவுறுத்தல்

தாய்லாந்து செல்லும் மலேசியர்கள்: மூன்றாம் தரப்பு காப்பீடு பெற அறிவுறுத்தல்

பத்து கவான் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருளில் தண்ணீர் கலக்கவில்லை - அமைச்சு உறுதி

பத்து கவான் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருளில் தண்ணீர் கலக்கவில்லை - அமைச்சு உறுதி

“என் மகளுக்கு நீதி வேண்டும்” – கொலை செய்யப்பட்ட ஐரினின் தந்தை உருக்கம்

“என் மகளுக்கு நீதி வேண்டும்” – கொலை செய்யப்பட்ட ஐரினின் தந்தை உருக்கம்

பத்து காவான் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய வாகனங்களில் கோளாறு? - அமைச்சு விசாரணை

பத்து காவான் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய வாகனங்களில் கோளாறு? - அமைச்சு விசாரணை